ரூ. பீஹாரில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Added : செப் 16, 2020
Share
Advertisement

புதுடில்லி:பீஹாரில், 541 கோடி ரூபாய் செலவில், ஏழு நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில், சட்டசபை தேர்தல் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், பீஹாரில், இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட, 541 கோடி ரூபாய் செலவில், ஏழு புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று பங்கேற்றார்.

அதில், பிரதமர் மோடி பேசியதாவது:பீஹாரில், ஒரு காலத்தில், சிறந்த சிந்தனை மற்றும் செயல் திட்டங்களை கொண்ட தலைவர்கள் இருந்தனர். அவர்களுக்குப் பின், சுயநலம் மற்றும் ஓட்டு அரசியலை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் அமர்ந்த பின், நல்லாட்சி என்பது திசை திரும்பிவிட்டது.

தற்போது, நிதிஷ் குமார் தலைமையில், பீஹாரில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. பெண் கல்வி, சமுதாயத்தில் பின்தங்கிய சமூகத்தினரை, உள்ளாட்சி அதிகாரங்களில் அமர வைத்தது உட்பட, பல்வேறு புதிய முயற்சிகளில், நிதிஷ் குமார் அரசு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை அதிகரிக்க, மாநில அரசுடன் இணைந்து, மத்திய அரசு செயல்படுகிறது.

பீஹாரின், 20 நகரங்கள், கங்கை நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளன. நதியை துாய்மையாக பராமரிக்க, 6,000 கோடி ரூபாய் செலவில், 50 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், கவர்னர் பாகு சவுஹான், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், கஜேந்திர சிங் ஷெகாவத், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.---------------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X