பொது செய்தி

தமிழ்நாடு

சம்பாரிச்சு தரமாட்டேன்!

Added : செப் 16, 2020
Share
Advertisement
 சம்பாரிச்சு தரமாட்டேன்!

தாய்க்கும் மகனுக்கும் இடையே நடக்கும் செல்ல சண்டை காட்சி பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. அடிக்கடி வீட்டை விட்டு வெளியே ஓடி விடும் தன் மகனை, தாய் 'இனிமே வருவியா கீழே' என திட்டுகிறார். அதற்கு அந்த சிறுவன், 'இனிமே வந்தா என்னை கட்டிப்போட்ருங்க, அதான் வரமேட்டேன்னு சொல்லிட்டேன்ல. நீ இப்புடி கோபமா திட்டிட்டே இருந்தா பெரிய ஆளாகி சம்பாரிச்சு தரமாட்டேன், அன்பா பேசுனாதான் சம்பாரிச்சு தருவேன்' என, அம்மாவிடம் நைசாக பேசி, சிரிக்க வைக்கிறான். இந்த வீடியோவை பார்த்து பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.இடித்து தள்ளிய கார்காரில் வந்த இளைஞர் ஒருவர் சிக்னலில் காத்திருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு கார் உரசியபடி நின்றுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், உரசிய காரின் டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி, வெளியே வா என கத்துகிறார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவர் கார் கண்ணாடிகளை உடைக்க முற்பட்டார். இதனால், உரசிய காரின் டிரைவருக்கும் கோபம் வர, அவரை அப்படியே இடித்து தள்ளிவிட்டு காரை ஓட்டிச் சென்று விடுகிறார். இந்த காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாகியுள்ளன.இரும்பு மனிதன்பெரும்பாலும், கராத்தே வீரர்கள் ஓடு, செங்கல், மரக்கட்டைகளை உடைத்துதான் பார்த்திருப்போம். ஆனால், சீனாவில் ஒரு இளைஞர், பாறையையே அசால்ட்டாக உடைத்து நொறுக்குகிறார். கூழாங்கற்கள் போன்று இருக்கும், பெரிய பெரிய கற்களை எடுத்து, கைகளை துாக்கி ஓங்கி ஒரே அடி அடிக்கிறார். அவருடைய பலத்துக்கு அந்த கற்கள் இரண்டு துண்டகளாக சிதறி விழுகின்றன. வலைதளத்தில் வைரலாகும் இந்த காட்சிகள், நெட்டிசன்களை வாயடைத்துபோக செய்துள்ளது.எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!இளைஞர் ஒருவர் அரிவாளை எடுத்து பப்பாளி மரத்தின், நடுவில் வெட்டுகிறார். உடனே, அதிலிருந்து தண்ணீர் ஊற்று போல கொப்பளித்துக் கொண்டு வெளியே வருகிறது. அவரும், அந்த தண்ணீரில், முகம் கழுவி பின்னர், அதையே குடிக்கவும் செய்கிறார். ஆரம்பத்தில், இது புரியாத புதிர் போலத்தான் இருக்கும். ஆனால், வீடியோவின் கடைசியில் பார்த்தால், அது ஏற்கனவே பட்டுப்போன மரம் என்று. அந்த, மரத்தின் மேல் இருந்து மற்றொரு இளைஞர் தண்ணீரை ஊற்றுகிறார். தற்போது, இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X