'ஜே.இ.இ., - நீட்' தேர்வு மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி,:நீட், ஜே.இ.இ., தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் குறையாத நிலையில், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நிராகரித்து விட்டன. இதையடுத்து, செப்டம்பர் முதல் வாரத்தில், ஜே.இ.இ., தேர்வும், செப்., 13 ஆம் தேதி, நீட் தேர்வும், பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 'கொரோனா தொற்று, போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால், ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, மறுதேர்வு நடத்த, தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-செப்-202014:51:50 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan என்பது சதவீத மாணவர்களால் வர முடியுது. வராத சிலருக்காக வழக்காடும் நபருக்கு அபராதம் விதிக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X