சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள்

மூணாறு:மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 41வது நாளான நேற்று சர்வ மத பிரார்த்தனை நடந்தது.

கேரளா, மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஆக.6 ல் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 30 வீடுகள் உட்பட 32 கட்டங்கள் காணாமல் போயின. அதில் சிக்கி தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கேரள வாழ் தமிழர்கள் 70 பேர் மாயமாகினர். அவர்களில் 66 பேரின் உடல்கள் மீட்கப்பட்டடன. 4பேரின் நிலை தெரியவில்லை.

சம்பவம் நடந்து 41ம் நாளான நேற்று பெட்டிமுடியில் சம்பவ நடந்த இடத்திலும், உடல்கள் அடக்கம் செய்த இடத்திலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி, சர்வ மதம் கூட்டு பிரார்த்தனை நடந்தது. தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் கங்கரநாராயணசர்மா, மவுண்ட் கார்மல் சர்ச் பாதிரியார் வின்சென்ட், ஜமாத் இமாம் ஹபீது முகம்மது, வார்டு உறுப்பினர் சாந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சென்னை, திருப்பூர், கோயம்புத்துார், வால்பாறை , கயத்தாறு,,பிள்ளையார்குளம், சங்கரன்கோவில் பகுதிகளில் இருந்து வந்த இறந்தவர்களின் உறவினர்கள் 80க்கும் மேற்பட்டோர் துக்கம் தாளாமல் கதறி அழுதனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X