சம்பவம் செய்தி

தமிழ்நாடு

85,000 ஓய்வூதியர் பாதிப்பு 59 மாத அகவிலைப்படி நிலுவை

Added : செப் 16, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:''தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் 85 ஆயிரம் பேருக்கு 59 மாதங்களாக அகவிலைப்படி நிலுவை தொகை ரூ.21.25 கோடி வழங்கப்படவில்லை'' என தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் நலச்சங்க மண்டல பொது செயலாளர் பவுல்ராஜ் கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் மேலும் கூறியதாவது:அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாழ்கிறது. பலர் சர்க்கரை நோய் உள்ளிட்ட மருத்துவ செலவுகளுக்கே அவதிப்படும் நிலையில் 2016 முதல் இதுவரை 59 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை, ஓய்வூதிய பலன் வழங்கவில்லை. இத்தொகையை உடனடியாக வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X