பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் தொடர்மழை

Added : செப் 16, 2020
Share
Advertisement

தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்து வரும் தொடர்மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பெரியாறு அணை நீர்பிடிப்பில் ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செப். 7ல் அதிகபட்சமாக 43 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி பெரியாறில் 5.2 மி.மீ., தேக்கடியில் 1.4 மி.மீ., மழை பதிவானது. நேற்று முன்தினம் 126.05 அடியாக இருந்த நீர்மட்டம் 126.20 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1578 கன அடியாகும்.

தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3877 மில்லியன் கன அடியாகும். நேற்று மாலையில் நீர்பிடிப்பில் சாரல் மழை பெய்தது.வைகை அணையின் நீர்மட்டம் 61.68 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 950 கன அடியாகவும், நீர்திறப்பு 972 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 3931 மில்லியன் கன அடியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X