மதுரை:மதுரை புதுஜெயில் ரோடு மதுரா கோட்ஸ் பாலம் இறக்கத்தில் அனுமதியின்றி 2 அடி உயர ஈ.வெ.ரா. சிலையை வைத்ததற்கு ஹிந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிலை அகற்றப்பட்டது.
இங்கு கரிமேடு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் ஒரு அடி உயர ஈ.வெ.ரா., சிலையை சில ஆண்டுகளுக்கு முன் அனுமதியின்றி நிறுவி பராமரித்து வந்தார். நேற்று மாலை 2 அடி உயர பைபரில் செய்யப்பட்ட முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இதையறிந்த ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சிலை அகற்றுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் குவிக்கப்பட்டனர்.'சிலையை அகற்றாவிட்டால் பிள்ளையார் சிலை நிறுவுவோம்' எனக்கூறி 5 அடி உயர சிலையை எடுத்து வந்தனர். அவர்களிடம் போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே இருந்த ஒரு அடி ஈ.வெ.ரா., சிலையை வைப்பது என்று முடிவானதை தொடர்ந்து கலைந்து சென்றனர். அனுமதியின்றி பராமரித்து வந்த இச்சிலையையும் அகற்ற வேண்டும் என்று ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE