பொது செய்தி

தமிழ்நாடு

பதவி உயர்வுக்காக பரிதவிக்கும் எஸ்.ஐ.,க்கள்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை:தமிழக போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்காக 600 எஸ்.ஐ.,க்கள் 2ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.

2008 ல் எஸ்.ஐ.,யாக 600 பேர் பணியில் சேர்ந்தனர். பத்தாண்டுகளில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது விதி, அதற்கான தகுதி இவர்கள் பெற்ற போதிலும் இன்னும் எஸ்.ஐ.,யாகவே உள்ளனர். ஆனால் இன்ஸ்பெக்டர் பதவிக்குரிய சம்பளம் பெறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது: டி.எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு பெற்று சென்றவர்கள் மூலம் 89 இன்ஸ்பெக்டர் பணியிடமும், புதிய மாவட்டங்களில் 105 பணியிடங்களும், பல்வேறு பிரிவுகளில் 84 பணியிடங்களும் காலியாக உள்ளன. காலதாமதத்தால் பதவி உயர்வு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றமும் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்ட போதிலும், இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப எங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X