பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க ஏ.பி.வி.பி.,திட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை:'இக்கல்வியாண்டில் நாடு முழுவதும் ஒரு கோடி மாணவர்களையும், தமிழகத்தில் 2 லட்சம் பேரையும் ஆன்லைன் மூலம் உறுப்பினர்களாகசேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது' என ஏ.பி.வி.பி., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மதுரையில் மாநில இணை செயலாளர் கோபி, நகர் செயலாளர் வெங்கட்ராஜ் கூறியதாவது:நாடு முழுவதும் மாணவர்களிடையே அறிவு, ஒழுக்கம், ஒற்றுமை வளர பல ஆக்கப்பூர்வமான பணிகளை ஏ.பி.வி.பி., செய்து வருகிறது. தற்போது 32 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அமைப்பு இது.

ஆண்டுதோறும் கல்வியாண்டு துவக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாக ஆன்லைன் மூலம் சேர்க்கை நடத்த திட்ட மிடப் பட்டு ள்ளது. இதன்படி ஒரு கோடி பேரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.www.abvb.org/join என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளலாம். உறுப்பினர் சேர்க்கை மற்றும் சந்தேகங்களுக்கு 88838 06211 மற்றும் 79043 45452 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X