பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யா மீது பா.ஜ.,வக்கீல்கள் புகார்

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருப்புத்துார்:நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு சார்பில் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலர் முருகேசன் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசின் உத்தரவின்படி மருத்துவப் படிப்பிற்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இத்தேர்வு குறித்து பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

செப்.,13ல் நடிகர் சூர்யா சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பேசியுள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கால் காணொலிக் காட்சி மூலம் நீதிமன்ற நடவடிக்கை நடைமுறைப் படுத்தப்படு வதையும் அவமதிக்கும் விதமாக பேசியுள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நடிகர் சூர்யா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X