பொது செய்தி

தமிழ்நாடு

ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் லண்டனில் இருப்பது கண்டுபிடிப்பு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை;தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி வெண்கல சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு

சென்னை;தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி வெண்கல சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.latest tamil newsதமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார்.
அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அவற்றில் தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பினர்.


latest tamil newsஅந்த படங்களில் இருப்பது மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து 1978ல் திருடப்பட்ட ராமர், லட்சுமணர் மற்றும்சீதா பிராட்டி வெண்கலசிலைகள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.
மேலும் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். தகவல் அறிந்து அந்த டீலர் ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளையும் லண்டன்அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். சிலைகளை தமிழகத்திற்கு எடுத்து வர இந்தியதொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
16-செப்-202014:19:26 IST Report Abuse
Madhusoodhana Ramachandran இவ்வளவு பேர் திராவிடக்கட்சிகளை சாடி எழுதுகிறீர்களே அப்படியும் அவர்கள்தானே தமிழ்நாட்டில் கோலோச்சுகிறார்கள்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
16-செப்-202013:07:27 IST Report Abuse
Tamilnesan திருடர்களின் கூடாரமாகிவிட்டது தமிழ்நாடு.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து 1978ல் திருடப்பட்ட ராமர், லட்சுமணர் மற்றும்சீதா பிராட்டி வெண்கலசிலைகள் - செய்தி 31-Jan-76 முதல் 27-Jan- 89 வரை பதிமூன்று ஆண்டுகள் DMK ஆட்சியில் இல்லை 30-Jun-77 முதல் 30-Jan-88 வரை பதிமூன்று ஆண்டுகள் அதிமுக ஆட்சி
Rate this:
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
16-செப்-202019:42:48 IST Report Abuse
Nemam Natarajan Pasupathyஇரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சிலைகள் திருட்டு, பாறை சுரண்டல், ஆற்று மண் சுரண்டல், கடல் மணல் சரண்டல் இவைகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை எவருக்கு வக்காலத்து வாங்குகிரீர் ஐயா?...
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்அபச்சாரம் அபச்சாரம் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் வள்ளல் MGR ஆட்சியை குறை சொல்வதா? அவர் ஆட்சிக்கு ஈடு இணை இல்லை? அவர் எத்தனையோ கல்வி தந்தையை உருவாக்கியவர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X