சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரணியை சுற்றி கழிவு நீர்: மக்கள் கோரிக்கை

Added : செப் 16, 2020
Share
Advertisement

தேவகோட்டை : தேவகோட்டையில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ்கலங்காத கண்ட விநாயகர்கோயில் உள்ளது.

இக்கோயிலின் பின்புறம் பெரிய ஊரணி உள்ளது.இந்த ஊரணியிலிருந்து கோயிலுக்கும், மக்கள் குடிப்பதற்கும் தண்ணீரை பயன்படுத்தி வந்துள்ளனர். ஊரணியை சுற்றி, ஒரு சிலர் கடைகள் கட்டியுள்ளனர். சிலர் செப்டிக் டேங்க் இணைப்பையும், சிலர் கடைகளின் கழிவு நீர் இணைப்புக்களையும் இந்த ஊருணிக்குள் விட்டுஉள்ளனர். விநாயகர் கோயிலுக்கு வருபவர்களும், ஊரணியின் மேற்கு புறம் இருக்கும் ரெங்கநாதர் பெருமாள் கோயில், கோதண்டராமஸ்வாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தில் முகம் சுளித்தபடி வரவேண்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட கோயில்அதிகாரிகளும், சுகாதார துறை அதிகாரிகளும் கழிவுநீர் குழாய்களை அகற்றிட அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X