பொது செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டையில் வழக்கம்போல் சந்தை செயல்பட அனுமதி

Added : செப் 16, 2020
Share
Advertisement

தேவகோட்டை : தேவகோட்டையில் வழக்கம் போல் தினசரி, வாரச்சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேவகோட்டையில் தினசரி சந்தை பஸ் ஸ்டாண்ட் அருகிலும், ஞாயிறன்று கண்டதேவி ரோட்டிலும் சந்தை செயல்பட்டது. ஊரடங்கு காரணமாக தினசரி சந்தை நான்கு இடங்களிலும், வாரச்சந்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.ஊரடங்கு தளர்விற்கு பின் பல இடங்களில் சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தேவகோட்டையில் மட்டும் சந்தை நடத்த அனுமதிவழங்கப்படவில்லை.வியாபாரிகள், துணை கலெக்டர் சுரேந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.முடிவில் பழைய முறைப்படி சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பஸ் ஸ்டாண்ட் அருகில் தினசரி மார்க்கெட் வளாகத்திலேயே தினசரி சந்தையை நடத்தவும், ஞாயிறன்று கண்டதேவி ரோட்டில் வாரச்சந்தை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X