பொது செய்தி

தமிழ்நாடு

காம்பவுண்ட் சுவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாத நிலையில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வருகிறது.

சுவர் இன்றி திறந்த வெளியாக உள்ளதால், அடிக்கடி பாம்புகள் வளாகத்தில் உலா வருகிறது. மருத்துவப்பணியாளர்கள், பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மருத்துவத்துறை அதிகாரிகள் காம்பவுண்ட் சுவர் எழுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரோட்டோர முட்களால் பாதிப்புஆர்.எஸ்.மங்கலம்: அரியாண்கோட்டை, சாலைக்கிராமம் வழியாக இளையான்குடி செல்ல ரோடு வசதி உள்ளது. அரியாண்கோட்டை வரை ரோட்டின் இரு ஓரங்களிலும் கருவேல மரங்கள்வளர்ந்து உள்ளன.

தற்போது போக்குவரத்து துவங்கியுள்ள நிலையிலும், ரோட்டோரத்தில் உள்ள மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நடக்கிறது. டூவீலர்களில் செல்பவர்கள் ரோட்டோர முட்களால் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X