சம்பவம் செய்தி

தமிழ்நாடு

55 வயது பெண் பலாத்கார கொலை

Added : செப் 16, 2020
Share
Advertisement

பரமக்குடி : பரமக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தில் 55 வயதான பெண்ணை மானபங்கப்படுத்தி கொலை செய்த மணமான வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியத்திற்குட்பட்ட எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மனைவி தெய்வானை 55. இவர் 2019 நவ., 26ல் வயலில் வேலைக்காக சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும்வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தேடினர். அப்போது வயல்வெளியில் ஒன்றரை பவுன் நகைகள் திருட்டப்பட்டு சகதியில் முகம் புதைந்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.சத்திரக்குடி போலீசார்விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்ட தெய்வானை மகன் குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக உள்ளார். இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சிறப்பு குற்றப் பிரிவு எஸ்.ஐ., குகனேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒரு வருடமாக தேடப்பட்ட நிலையில் தீயனுார் காலனியைச் சேர்ந்த வடிவேலு மகன் ரவி 36, கைது செய்யப்பட்டார். இவர் சேம்பரில் லாரி டிரைவராகபணியில் உள்ளார். இவரிடம் நேற்று மாவட்ட எஸ்.பி., கார்த்திக் விசாரணை நடத்தினார்.போலீசார் கூறியதாவது:தெய்வானை வயல் வேலைக்கு சென்ற போது, தனது ஆசைக்கு இணங்க ரவி அழைத்துள்ளார். அப்போது போதையில் தெய்வானையை தலையில் அடித்து மானபங்கப்படுத்தி கொலை செய்துள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X