சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.மங்கலத்தில் மழை இல்லை பறவைக்கு இரையாகும் நெல் விதை

Added : செப் 16, 2020
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விதைப்பு செய்யப்பட்ட நெல் விதைகள் முளைப்பதற்கு ஏற்ற மழை இல்லாததால் வயல்களில் உள்ள நெல் விதை பறவைகளுக்கு இரையாகி வருகின்றன. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட ஆனந்துார், திருத்தேர்வளை, ஆய்ங்குடி, ராதானுார், புக்குளம், சிறுநாகுடி உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு நெல் விதைப்பு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விதைப்பு செய்யப்பட்ட நெல் விதைகள் முளைப்பதற்கு ஏற்ற மழை இல்லாததால் வயல்களில் உள்ள நெல் விதை பறவைகளுக்கு இரையாகி வருகின்றன.

ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட ஆனந்துார், திருத்தேர்வளை, ஆய்ங்குடி, ராதானுார், புக்குளம், சிறுநாகுடி உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு நெல் விதைப்பு செய்யப்பட்டன.விதைப்பு செய்த பின்பு இப்பகுதிகளில் மழை இல்லாததால், நெல் பயிர்கள் முளைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இரண்டு ஆண்டுகளாக மழை ஏமாற்றத்தால் விவசாயத்தில் பாதிப்படைந்த இப்பகுதி விவசாயிகள், நடப்பு ஆண்டில் பருவ மழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.விதைகள் முளைப்பிற்கு ஏற்ற மழைஇல்லாதநிலையில், விதைகள் பறவைகளுக்கு உணவாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X