பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரைக்கு மறைமுக ஏலம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருப்புவனம் : திருப்புவனத்தில் கொப்பரை தேங்காய் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் கொள்முதல் செய்யப்படுகிறது.

முதல் முறையாக திருப்புவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சிவகங்கை மாவட்ட விற்பனைகுழு மேலாளர் மாயாண்டி, திருப்புவனம் மேற்பார்வையாளர் பொன்னுச்சாமி முன்னிலையில் மறைமுக ஏலம் நடந்தது.விவசாயிகள் 5.40 குவிண்டால் கொப்பரை தேங்காய் கொண்டு வந்திருந்தனர். கிலோ 105 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மறைமுக ஏலம் நடைபெறும் எனவும் விவசாயிகள் தரம் பிரிக்கப்பட்ட கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்து விற்பனை செய்து லாபம் ஈட்டலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X