சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியத்தை இழுத்தடிக்கும் அதிகாரிகள்

Added : செப் 16, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஓய்வு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில்தொடர்ந்து தாமதம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவுஅங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் முத்திருளாண்டி கூறியதாவது: ராமநாதபுரம் ஒன்றியத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள்130 பேர் உள்ளனர். ஒன்றிய நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் தலா ரூ.2000 ஓய்வூதியம் வழங்கப் படுகிறது. ஆனால் அனைத்து ஒன்றியங்களிலும் வழங்குவது போல் மாத முதல் தேதியில் வழங்குவது இல்லை. பத்து நாள், 20 நாட்கள் கழித்து வழங்குகின்றனர். ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் மேலாளரின் மெத்தனப்போக்கால் சிரமப்படுகிறோம்.

மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் முதல் தேதியில் வழங்கும் நிலையில் ராமநாதபுரம் ஒன்றியத்தில் மட்டும் இந்த நிலை தொடர்கிறது.ஆக., மாதத்திற்கானஓய்வூதியம் நேற்று வரை வழங்கப்படவில்லை. எனவே முதல் தேதியில் வழங்க கலெக்டர் வீரராகவ ராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X