பொது செய்தி

தமிழ்நாடு

எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்தும்இழுத்தடிப்பு செய்யும் அதிகாரிகள்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சிவகங்கை : கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 22 லட்ச ரூபாய் இரு வகுப்பறை கட்டடத்திற்கு எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்தும் ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு 354 மாணவர்கள் படித்தனர். நடப்பு ஆண்டில் 394 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.அப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ராஜ்ய சபா எம்.பி., டி.கே.ரங்கராஜன் தொகுதி வளர்ச்சி நிதியில் 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் கடிதம் 2019 ஜூலை 8ல் வழங்கியுள்ளார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இன்று வரை வகுப்பறை கட்டட பணிகளை துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.பள்ளிகள் திறந்தால் மாணவர்கள் படிப்பதற்கு வகுப்பறை இல்லாமல் சிரமப்படும் நிலை ஏற்படும். அங்கு பயின்று வரும் மாணவர்களுக்கு இருக்கை வசதியும் இல்லை. மாணவர்கள்தரையில் அமர்ந்து படிக்கும் நிலையும் உள்ளது.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கை, வகுப்பறை அமைத்து தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X