ராமேஸ்வரம் : மண்டபத்தில் கடன் வழங்க மறுத்த வங்கி முன் மாற்று திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
மண்டபம் பேங்க் ஆப்பரோடா வங்கியில், ஊரடங்கு நாளில் வருவாய் இன்றி பரிதவித்த மாற்று திறனாளிகள் சிலர், மாற்று தொழிலுக்கு கடனுதவி கேட்டு மனு கொடுத்தனர். வங்கியில் கடனுதவி வழங்க மறுத்ததால், நேற்று மாற்றுதிறனாளிகள் பலர் வங்கி முன் கூடி கடன்கேட்டு ஆர்ப்பாட்டம்செய்து, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் தாலுகா மாற்று திறனாளிகள் சங்க ராமநாதபுரம் தாலுகா செயலர் அரிஹரசுதன், மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், மண்டபம்கிளை நிர்வாகிகள் கணேசன், கோபால் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE