சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.30 லட்சத்திற்காக பெண் கடத்தல்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கையில் ரூ.30 லட்சத்திற்காக பெண்ணை கடத்திய சம்பவத்தால் இருதரப்பினர் மோதியதில்,இருவர் காயமுற்றனர்.

இரு தரப்பை சேர்ந்த 13 பேர் மீது வழக்கு பதிந்தனர். சிவகங்கை தமறாக்கி கணேசன் மகன் ரஞ்சித். இவர் ஒரு ஆண்டில் இரட்டிப்பாக பணம் வழங்கும், பைனான்சில் வேலை செய்வதாக கூறி, ரூ.1 கோடி வரை வசூல் செய்துஉள்ளார். அப்பணத்தை பெற்ற தனியார் நிதி நிறுவன அதிகாரி பணத்துடன் தலைமறைவானார். இது குறித்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவில் உள்ளது.இதையடுத்து, சிவகங்கை காமராஜர் காலனியை சேர்ந்த பார்த்தசாரதி மனைவி ஜோதி, மகன் பாலாஜி, அய்யனார்மனைவி விஜயா, மோகன், காளீஸ்வரி, அமர் ஆகியோர், தாங்கள் பலரிடம் வசூலித்து தந்த ரூ.30 லட்சத்தை திரும்ப தருமாறு ரஞ்சித்திடம் கேட்டுள்ளனர்.

பணம் கிடைக்காததால் ரஞ்சித்தின் தாய் வைராத்தாளை 55, ஆக.,12ம் தேதி கடத்தி வந்து, சிவகங்கை காமராஜர் காலனியில் அடைத்து வைத்துஉள்ளனர். நேற்றுமுன்தினம் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையறிந்த வைரத்தாளின் மகன் ரஞ்சித், அருண், ரஞ்சிதா உட்பட 6 பேர் பார்த்தசாரதியின் வீட்டிற்கு சென்று தாக்கினர். அங்கிருந்த பாலாஜி 23, மாயழகு மனைவி ராஜலட்சுமி 40, காயமுற்றனர். இரு தரப்பு புகாரின் பேரில் 13 பேர் மீது இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X