தனுஷ்கோடி தேசிய சாலை விரிவாக்கப்பணி ஆரம்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி தேசிய சாலை விரிவாக்கப்பணி ஆரம்பம்

Added : செப் 16, 2020
Share

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை கடற்கரை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியது.

2017ல் பிரதமர் மோடி துவக்கி வைத்த தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கிற்கு முன் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தற்போது சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனுஷ்கோடி சர்ச் முதல் முகுந்தராயர் சத்திரம் வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் அகலப்படுத்தினர்.நேற்று தனுஷ்கோடி சர்ச் முதல் அரிச்சல்முனை வரை 4.5 கி.மீ., துாரத்திற்கு சாலை இருபுறமும் தலா 5 அடி அகலப்படுத்தும் பணி துவங்கியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X