காரைக்குடியில் இளைஞர் படுகொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் இளைஞர் படுகொலை

Added : செப் 16, 2020
Share
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரத்தில் நேற்று நந்தியாகோட்டை விக்னேஷ் 25, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருவாடனை எஸ்.பி.பட்டிணம் அருகே உள்ள நந்தியாகோட்டை அறிவழகன் மகன் விக்னேஷ் 25.மெக்கானிக்.நேற்று மதியம் நண்பர் சண்முகத்துரையுடன் வ.உ.சி., சாலையில் பைக்கில் சென்றார். அவ்வழியாக பைக்கில் வந்த பரூப்பூரணி நிறைகுளத்தான் மகன் சிவா 20, என்பவருடன் பைக் ஓட்டி செல்வதில் தகராறு

காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரத்தில் நேற்று நந்தியாகோட்டை விக்னேஷ் 25, வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருவாடனை எஸ்.பி.பட்டிணம் அருகே உள்ள நந்தியாகோட்டை அறிவழகன் மகன் விக்னேஷ் 25.மெக்கானிக்.நேற்று மதியம் நண்பர் சண்முகத்துரையுடன் வ.உ.சி., சாலையில் பைக்கில் சென்றார். அவ்வழியாக பைக்கில் வந்த பரூப்பூரணி நிறைகுளத்தான் மகன் சிவா 20, என்பவருடன் பைக் ஓட்டி செல்வதில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவா நண்பர் ஆனந்த் என்பவருடன் பைக்கில் விரட்டி சென்று மீனாட்சிபுரம் பகுதியில் வைத்து விக்னேசை பட்டா கத்தியால் வெட்டி கொன்றார். எஸ்.பி., ரோஹித்நாதன், டி.எஸ்.பி.,அருண் சம்பவ இடத்தில் விசாரித்தனர். தனிப்படை போலீசார் சிவாவை நேற்றிரவு கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X