பொது செய்தி

தமிழ்நாடு

இடுக்கியில் இரண்டாம் மின்உற்பத்தி நிலையம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

இடுக்கி : இடுக்கியில் இரண்டாம் மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என கேரள மின்துறை அமைச்சர் மணி தெரிவித்தார்.

இடுக்கி அணையின் நீரில் மூலமற்றம் நீர்மின் நிலையத்தில் 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. அங்கு ரூ.70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அலுவலகத்தை கேரள மின்துறை அமைச்சர் மணி துவக்கி வைத்து பேசியதாவது:இடுக்கியில் இரண்டாம் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். அத்திட்டதிற்கு மத்திய ஏஜன்சிகள் ஆய்வு நடத்தும். பூமிக்கு அடியில் அமைப்பதற்கு முடிவு செய்து இரவிலும் செயல்படும் வகையில் அமைக்கப்படும்.

மாநிலத்தில் சோலார் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். அதற்கு இடுக்கி அணை பகுதி ஏற்றதாக ஆய்வில் தெரியவந்தது.மின் உற்பத்தி அதிகரிக்கும் போது விலைக்கு வாங்கும் செலவு குறைந்து வெளியில் மின்சாரம் விற்கும் நிலை ஏற்படும். நீர்மின் நிலையங்கள் அதிக லாபத்தை ஈட்டி தருகிறது. கொரோனா காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்ததால் பயனாளிகள் அதிக கட்டணம் செலுத்த நேரிட்டது. பயனாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு கட்டணம் குறைக்கப்பட்டது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X