சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நடவடிக்கையில் அதிருப்தி: வன அலுவலர்கள் புகார்

Added : செப் 16, 2020
Share
Advertisement
தேனி : வனப்பணியாளர்கள் தாக்கப்பட்டதில் போலீஸ் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்து வன அலுவலர்கள் டி.ஆர்.ஓ., ரமேஷ், எஸ்.பி., சாய் சரண் தேஜஸ்வி யிடம் புகார் அளித்தனர். மேகமலை வனவர் சரவணக்குமார், வன காப்பாளர் அப்துல் கபூர் வனத்தில் மாடுகள் மேய்ச்சலுக்கு செல்வதை தடுத்தில் காமன்கல்லுார் முருகன் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். மயிலாடும்பாறை போலீசார்

தேனி : வனப்பணியாளர்கள் தாக்கப்பட்டதில் போலீஸ் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்து வன அலுவலர்கள் டி.ஆர்.ஓ., ரமேஷ், எஸ்.பி., சாய் சரண் தேஜஸ்வி யிடம் புகார் அளித்தனர்.

மேகமலை வனவர் சரவணக்குமார், வன காப்பாளர் அப்துல் கபூர் வனத்தில் மாடுகள் மேய்ச்சலுக்கு செல்வதை தடுத்தில் காமன்கல்லுார் முருகன் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட செயலாளர் சாந்தகுமார் தலைமையில் வன அலுவலர்கள் 25 பேர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மாவட்ட செயலாளர் கூறியதாவது: மேகமலையில் வனவர், வனகாவலரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியது கண்டிக்க தக்கது. போலீஸ் தொடர் நடவடிக்கை தொய்வாக உள்ளது. இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்ட வன அலுவலர்களை மிரட்டி ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். இது குறித்து புகார் தெரிவித்துள்ளோம். இனி இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X