பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப நுாலக உறுப்பினர் திட்டம் துவக்கம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை கிளை நுாலகத்தில் குடும்ப நுாலக உறுப்பினர் திட்டம் துவக்கப்பட்டது.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்ப நுாலக உறுப்பினர் திட்டத்தை அரசு துவங்கியது. இதில் ரூ.110 செலுத்தினால் 5 உறுப்பினர் அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு அட்டைக்கும் தலா ஒரு புத்தகம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவர் வந்தாலும் 5 நுால்கள் தரப்படும். படித்துவிட்டு 15 நாட்களுக்குள் திரும்பி கொடுத்தால் மீண்டும் 5 புத்தகம் வழங்கப்படும். முதல் உறுப்பினர் அட்டையை வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன் பெற்றுக்கொண்டார். நுாலக ஆர்வலர்கள் திருப்பதி, ஜெகன், அய்யாச்சாமி, சிவபாலு, நித்தியானந்தம் இணைந்தனர்.

பெரும் புரவலர் திட்டத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்தி வழக்கறிஞர் மணிகார்த்திக், பொறியாளர் ஜெகன் இணைந்தனர். நல்நுாலகர் சவடமுத்து நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X