பொது செய்தி

தமிழ்நாடு

ஏமாறாதீர்

Added : செப் 16, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கடன் மற்றும் வேலை வழங்குவதாக அறக்கட்டளைகள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களின் மோசடி அதிகமாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு பல குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கின. அதேபோல் தொழில் முடக்கத்தால் பல இளைஞர்களுக்கு வேலை பறிபோயிற்று. இதனை பல அறக்கட்டளைகள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றன.கடந்த வாரம் நத்தம், நிலக்கோட்டை, செந்துறை, பழநி, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் பெற்று தருவதாகக்கூறி, ஒருவருக்கு ரூ.100 வீதம் 6000 பேரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று முன்தினம் நிலக்கோட்டையில் தனியார் அறக்கட்டளை ஒன்று ரூ.6000 வீதம் 300 பேரிடம் பெற்றதாக எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதேபோல வேலையில்லா இளைஞர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு, 'வேலை வாங்கி தருகிறோம், முன்பணமாக ரூ.500 முதல் ரூ. 1000 வரை கட்ட வேண்டும்' என்று கூறி, பணம் கட்டியபின் காணாமல் போய் விடுகின்றனர். இது குறித்து எஸ்.பி. அலுவலகத்தில் கேட்டபோது, 'சிறுதுளி பெருவெள்ளமாக, குறைவான தொகையை பலரிடம் வசூலித்து லட்சங்களில் மோசடி செய்கின்றனர். கடனுதவி செய்வதாகக்கூறி முறைகேடில் ஈடுபட்ட நத்தத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறைந்தளவு தொகை பறிபோவதால் யாரும் புகார் தருவதில்லை. புகார் மனுக்கள்மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆசை வார்த்தை கூறுவோரிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X