பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள....

Added : செப் 16, 2020
Share
Advertisement

குண்டர் சட்டத்தில் கைதுதேனி: சோலைத்தேவன்பட்டி வடக்குத்தெரு அழகர் 38. இவர் வெங்கடாசலபுரம் சுடுகாடு அருகே பிக்கப் வேனில் மணல் திருடினார். வீரபாண்டி போலீசார் கைது செய்து பெரியகுளம் சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே கண்டமனுார் போலீஸ் ஸ்டேஷனில் மணல் திருட்டு வழக்கும், தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டதால் சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., பரிந்துரையில் கலெக்டர் பல்லவிபல்தேவ் குண்டர் தடுப்பு சட்டத்தில் அழகர் கைது செய்ய உத்தரவிட்டார். கிளை சிறையில் இருந்த அழகரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

விபத்தில் வியாபாரி பலிஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மொட்டனுத்து காலனியை சேர்ந்தவர் மனோகரன் 50, எண்ணெய் வியாபாரம் செய்தார். நேற்று ஆண்டிபட்டியில் இருந்து புள்ளிமான்கோம்பைக்கு வியாபாரத்திற்கு சென்றார். ரெங்கசமுத்திரம் காலனியை சேர்ந்த மணிகண்டன் 27, ஆண்டிபட்டியில் இருந்து புள்ளிமான் கோம்பைக்கு சரக்கு வாகனத்தை ஓட்டி சென்றார். டி.புதுார் அருகே எண்ணெய் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் மீது மோதியதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்த வெள்ளையத் தேவன்பட்டி காசிமாயன் 65, பால்பாண்டி மகள் தரணிகா 10 காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X