பொது செய்தி

தமிழ்நாடு

எகிறும் வெண்டை விலை கிலோ ரூ.63

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம் : வரத்து குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை தொடர்ந்து அதிகரித்து கிலோ ரூ.63 க்கு விற்றது.

உள்ளூர் பகுதியில் விளைச்சல் இல்லாததால் தேனி, திருச்சி, சேலம் மாவட்டங்களில் விளைந்த வெண்டைக்காய் இங்கு விற்பனைக்கு வருகிறது.வியாபாரிகளுக்கு தேவையான அளவு வரத்து இல்லை. இதனால் வெண்டைக்காய் விலை சென்ற 3 நாட்களில் கிலோவுக்கு ரூ.28 அதிகரித்துள்ளது. வெளியிடங்களில் வெண்டைக்காய் வரத்தை கணிக்க முடியாததால் அன்றைய வரத்தை கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

சென்ற ஞாயிறன்று கிலோ ரூ.35 க்கு விற்றது, நேற்று முன்தினம் ரூ.40 க்கும். நேற்று ரூ.63 க்கும் விற்பனையானது.கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், ''ஓணம் சமயத்தில் கூட வெண்டை இந்த விலைக்கு விற்கவில்லை, இனிவரும் நாட்களில் ரூ.100க்கு விற்கும் வாய்ப்புள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X