பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.750 கோடி மானியம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை : "தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.750 கோடி மானியத்தை வழங்கும் அறிவிப்பை சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் பழனிசாமி அறிவிக்க வேண்டும்" என தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் பொது செயலாளர் வெங்கடாசலபதி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது:மாநிலம் முழுவதும் பொது விநியோக திட்டத்தில் 32 ஆயிரம் ரேஷன் கடைகள், 270 எண்ணெய் வினியோக மையங்களை கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன. இவற்றில் 27 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம், கடை வாடகை, மின் கட்டணம், ரிப்பேரிங் கூலி உள்ளிட்ட செலவினங்களுக்காக அரசு மானியம் வழங்குகிறது.இதன்படி 2018 - - 2019 மற்றும் 2019 - -2020க்கு ரூ.750 கோடி மானியம் வழங்க வேண்டும். 2002 டிச.,க்குள் பணிக்கு சேர்ந்து 2021க்கு பின் ஓய்வுபெறும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கூட்டுறவு பொது நிதி அல்லது அந்தந்த சங்க புனரமைப்பு நிதி மூலம் எல்.ஐ.சி., ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.

ரேஷன் கடை பணியாளர் மற்றும் கூட்டுறவு பண்டகசாலை அலுவலர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் உரிய கல்வித் தகுதியுடன் 19 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றும் பணியாளர்களுக்கு நிர்வாகக் குளறுபடியால் அளிக்கப்படாமல் உள்ள பணிவரன்முறையை வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X