அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை

Added : செப் 16, 2020
Share

திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: வேளாண் கூட்டுறவு சங்கம், தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 2031 டன், டி.ஏ.பி., 1240 டன், எம்.ஓ.பி., 1173 டன், காம்ப்ளக்ஸ் 40126 டன், எஸ்.எஸ்.பி., 603 டன் மொத்தம் 9073 டன் இருப்பு உள்ளது. விற்கும் போது விற்பனை ரசீதில் விவசாயி கையொப்பம் பெற வேண்டும்.ஒரே நபருக்கு அதிக உரம் மற்றும் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு விற்க கூடாது. உரம் வாங்க ஆதார் கட்டாயம். உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகாருக்கு 94420 60637 ல் பேசலாம் என, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X