--திண்டுக்கல் : தபால் தலை, நாணயங்கள் சேகரிப்பில் பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டுவர். ஆனால் ஒன்பது வரை படித்துள்ள, திண்டுக்கல் கிழக்குரத வீதியில் வடை வியாபாரம் செய்யும் துரைராஜ் 49, அதில் ஆர்வம்காட்டி விலைமதிக்க முடியாத பழங்கால நாணயங்களை சேகரித்து அழகு பார்க்கிறார்.
இவரிடம் 500 க்கும் மேற்பட்ட அரிதான நாணயங்கள் உள்ளன.அரிதான அரசர்கள் நாணயங்கள்கி.பி., 300 -- 700 களில் வாழ்ந்த அரசர்கள் காலத்தில் பயன்படுத்திய நாணயங்கள், சிவகங்கை நாயக்கர், 1500 களில் ஆண்ட மதுரை நாயக்கர், ஆங்கிலேயர்களின் விக்டோரியா, சுல்தான்கள் கால காப்பர் நாணயம், ஓமன், ஜெர்மன், இத்தாலி, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை என பல நாட்டு நாணயங்களையும் சேகரித்துள்ளார். 9ம் நூற்றாண்டு சோழர், பாண்டியர்களின் கால நாணயங்கள் காண்போரை வியக்க வைக்கின்றன.கி.பி.1835 ஆம் ஆண்டில் முதன் முதலாக அச்சிட்ட நாணயத்தின், ஒரு பக்கம் கிழக்கிந்திய கம்பெனி முத்திரையுடன் கூடிய நாணயம், 1903 - 1936 அச்சிட்ட ஆங்கிலேயர்களான ஐந்தாம் ஜார்ஜ் வரை முகம் பதித்த முத்திரை நாணயங்களை வைத்துள்ளார்.
ராமர் பட்டாபிேஷக நாணயம், இந்தியா சுதந்திரம் அடைந்தபின் தாமரை, சூரியன், மகாத்மா காந்தி உள்ளிட்ட உருவங்கள் இடம்பெற்ற ரூ.1 முதல் ரூ.20 வரையான நோட்டுகளும் உள்ளன.ரூபாய் நோட்டுகள்இந்தியாவின் பழமையான ரூபாய் நோட்டுகள், பர்மாவின் கியாட், சிங்கப்பூரின் டாலர், இங்கிலாந்தின் பவுண்ட், மலேசியாவின் ரிங்கிட், சுவீடனின் குரோனா, அமெரிக்காவின் டாலர், சவுதி கத்தாரின் ரியால், கம்போடியாவின் ரியல், டென்மார்க்கின் க்ரோன், கொரியாவின் வோன், ஜப்பானின் யென், பிலிப்பைன்சின் பிசோ, சிரியாவின் சிரியா பவுண்ட் என பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகளை சேகரித்த வண்ணம் உள்ளார்.தங்கம், வெள்ளி, பித்தளை, செப்பு, காப்பர் உட்பட பல்வேறு உலோகங்களின் நாணயங்கள் பலஅளவுகளில் உள்ளது. இவரது சேகரிப்புகளில் உள்ள சுல்தான் நாணயம், புதுகோட்டை மகாராஜா நாணயம் மற்றும் அமெரிக்காவின் பழைய டாலர்களின் மதிப்பு இன்று பல ஆயிரம் என மதிப்பிடப்படுகிறது.ஹிந்து கடவுள்கள்முந்தைய காலத்திலேயே பல நாடுகளின் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஹிந்து கடவுள்களின் உருவங்கள் நிறைந்துள்ளன. ஜல்லிக்கட்டிற்கு தடை கேட்கும் இதே தமிழகத்தில் காளைகள் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டு பழநி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்கின் போது கோயில்கள் சார்பில் வழங்கிய நாணயம் காண்போரை கவர்கிறது. 1818 ல் ராமர் படம் பொறித்த 200 கிராம் செம்பு நாணயமும் உள்ளது.பல்வேறு நாடுகளிலும் அன்று முதல் இன்று வரை பயன்படுத்திய அனைத்து ஸ்டாம்புகளையும் தனியாக சேகரித்துள்ளார்.துரைராஜ் கூறியதாவது: பல தலைமுறைகளாக இவற்றை சேகரித்து வருகிறோம், எனது தந்தை, அவரது தந்தை என சேகரித்ததை நானும் 40 ஆண்டுகளாக தொடர்கிறேன். என் மகன் பாலமுருகனும், தற்போதே சேகரிக்க தொடங்கி விட்டான். பலர் அதிக பணம் தருவதாகக் கூறி நாணயங்களை கேட்பர். ஆனால் கஷ்ட நேரத்திலும் வீட்டையும், கடையையும் விற்றேனே தவிர, என் பாரம்பரிய சேகரிப்பை விற்கவில்லை. வருங்கால சந்ததியினருக்கு நம் முன்னோர்களின் சிறப்பு தெரிய வேண்டும். அருங்காட்சியகம் சென்றதில்லை. கண்காட்சிகளிலும் பங்கேற்ற தில்லை, என்றார்.இவரைப் பாராட்ட:- 70925 80700
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE