பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மணல் திருடியோர் கைதுவடமதுரை: கரட்டுப்பட்டி தனியார் நிலத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனை நடத்தியபோது கோட்டைப்பட்டி சக்திவேல் 22, தொட்டியகவுண்டனூர் சரவணக்குமார் 35, சிக்கினர். இருவரையும் கைது செய்த வடமதுரை போலீசார், மண் அள்ளும் இயந்திரம், லாரியை பறிமுதல் செய்தனர்.

மகளிர் குழுக்கள் போராட்டம்பழநி: ஆயக்குடியில் மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு தனியார் நிதி நிறுவனங்கள் கடனுதவி வழங்கி உள்ளன. ஊரடங்கால் ஆறு மாதமாக கடன் தொகை செலுத்த முடியாத நிலையில், வசூலுக்கு வருவோர் தகாத வார்த்தையால் பேசுவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பெண்கள் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து வற்புறுத்துவதால் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

பட்டிவீரன்பட்டியில் நினைவு அஞ்சலிபட்டிவீரன்பட்டி:நீதிக்கட்சி தலைவர் சவுந்திரபாண்டியன் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. பா.ம.க., பொருளாளர் திலகபாமா, நாடார் மகாஜன சங்க செயலாளர் கரிக்கோல்ராஜ், நாடார் முன்னேற்ற சங்க தலைவர் மகேந்திரவேல், பட்டிவீரன்பட்டி நாடார் மகாஜன சங்க தலைவர் ராஜாங்கம் உட்பட பலர் சவுந்திரபாண்டியன் சமாதியில் மலரஞ்சலி செலுத்தினர். சவுந்திரபாண்டியனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.இலை, பூக்களில் மயில், தாஜ்மஹால்கொடைக்கானல்: பிரையன்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர மயில் மற்றும் தாஜ்மஹால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சீசன் கொரோனா பாதிப்பால் ரத்தானது.

5 மாத இடைவெளிக்குப் பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க 'போரோ ஹார்பஸ்' தாவரத்தின் இலையால் தாஜ்மஹாலும், 'ஹைட்ராஞ்சியா' பூ மூலம் மயிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அன்னதானம் வழங்கல்திண்டுக்கல்: வேதாத்திரி நகர் அன்னபூரணிசேவை மையத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அறிவுத்திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் தாமோதரன், மனைவி நளினி, அன்புநெறி டிரஸ்ட்டை துவங்கி, கடந்தாண்டு முதல் உணவு வழங்கினர். கொரோனா காலத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு பகல் 12:00 மணிக்கு துர்க்கையம்மன் கோயில் வளாகம், எம்.வி.எம்.,ரயில்வே பாலம் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி அன்னதானம் வழங்குகின்றனர்

.வெறிநோய் தடுப்பூசி முகாம்நத்தம்: அண்ணா நகர், நல்லாகுளம், மீனாட்சிபுரம் பகுதிகளில் அதிகமாக தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. சில நாட்களுக்கு முன் நல்லாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் வெறிநாய் கடிக்கு பலியானார். இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சுவேதா தலைமையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார் ஏற்பாடு செய்திருந்தனர்.கிருமிநாசினி வழங்கல்திண்டுக்கல்: மாவட்ட மைய பொது நுாலகத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் பால்ஆரோக்கியராஜ் ரூ.6500 க்கு கிருமிநாசினி, முகக்கவசம் வழங்கினார். நுாலக அலுவலர் சரவணக்குமார் பெற்றுக் கொண்டார். அலுவலர்கள், வாசகர்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கி, கொரோனா குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.போட்டித் தேர்வுக்கு பயிற்சிதிண்டுக்கல்: தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைனில் பயிற்சி நடக்கிறது. இதில் பங்கேற்க 9655901960 ல் பேசலாம். தனியார் நிறுவனங்களில் வேலை பெற www.tnprivatejobs.tn.gov.in, போட்டி தேர்வு பாடக்குறிப்புகள் குறித்த விவரங்களுக்கு www.tamilnaducareerservices.tn.gov.in, திறன் மேம்பாடு பயிற்சி பெற www.tnskill.tn.gov.in ல் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 0451-2461498 ல் பேசலாம்.விண்ணப்பம் வினியோகம்சின்னாளபட்டி: செட்டியபட்டியில் ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முருகேசன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால்உசேன், ஊராட்சி தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். செட்டியபட்டி, கல்லுப்பட்டி, வளையபட்டி, வேளாங்கண்ணிபுரம், கே.பி.டி.நகரில் விண்ணப்பங்கள் வினியோகித்தனர். கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகளாக இளைஞர்களை நியமிக்க ஏற்பாடுகள் நடக்கிறது.தற்கொலைவேடசந்தூர்: வேடசந்தூர் அருகே ரங்கமலையில் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்த போது இறந்தவர் 2 வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. இறந்தவர் காவி கலர் வேட்டி அணிந்திருந்தார். சட்டை இல்லை. கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X