பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை பிறந்தநாள் விழா..

Added : செப் 16, 2020
Share
Advertisement

புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் புவனகிரியில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கடலுார் மேற்கு மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு ஒன்றிய செயலர் வினாயகமூர்த்தி மாலை அணவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், மாணவரணி ஜெயராஜ், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் அன்பரசன், கட்சி நிர்வாகிகள் துரை, நாகவேல், பக்கிரிசாமி, ஐயாத்துரை, ரமேஷ், ரவிமணி, செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சி துணைத் தலைவர் சந்தோஷ் நன்றி கூறினார்.புவனகிரியில் மேற்கு மாவட்ட ஜெ., பேரவை மற்றும் நகர கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நகர செயலர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் வாசுதேவன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெ., பேரவை செயலர் உமாமகேஸ்வரன் மாலையணிவித்தார். கவுன்சிலர்கள் சீனுவாசன், பவானி தங்கமணி, அஞ்சம்மாள்பாஸ்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், கட்சி நிர்வாகிகள் இளையராஜா, வேலு, செல்வராஜ், இளங்கோ, நகர பிரதி நிதி இங்கார்சல் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X