பொது செய்தி

தமிழ்நாடு

விருதை நகர தி.மு.க., சார்பில் அண்ணாத்துரை பிறந்தநாள் விழா

Added : செப் 16, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; விருத்தாசலம் மேற்கு மாவட்ட, நகர தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் அண்ணா துரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலர் தண்டபாணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, நகர அமைப்பாளர் பொன்கணேஷ், நிர்வாகிகள் அபுபக்கர், தட்சிணாமூர்த்தி, ஞானசேகரன், அறிவுடைநம்பி, சுந்தரமூர்த்தி, செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர்.மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சரவணன், சிவா, தளபதி, பக்கிரி சாமி உட்பட பலர் உடனிருந்தனர்.விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தொரவளூர் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சிவசங்கரன், இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய துணைச் செயலர் கோவிந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் பரமகுரு, மாவட்ட பொறியாளர் அணி செந்தில், தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்ச்செல்வன், இளைஞரணி துணை அமைப்பாளர் ஜனார்த்தனன் உட்பட பலர் பங்கேற்றனர்.வேப்பூர்வேப்பூர் அடுத்த நல்லுாரில் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் அண்ணாதுரை சிலைக்கு மாலையணிவித்து இனிப்புகள் வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், கிளை செயலர் அன்பழகன், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் தனசேகர், பாபு உடனிருந்தனர்.அதே போல் நல்லுார் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் நாராயணசாமி தலைமையில் மாலையணிவித்து இனிப்புகள் வழங்கினர். நிர்வாகிகள் ராஜா, குணா, ஜெயராமன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X