பொது செய்தி

தமிழ்நாடு

கோழி வளர்க்க ஆர்வமுள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கோழி வளர்க்க ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:ஊரக பகுதிகளில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் 5,200 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். அக்கிராமத்தில் நிரந்தர உறுப்பினராகவும், இத்துறையில் வேறு ஏதேனும் திட்டத்தில் பயன்பெறாதவராக இருக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், திருநங்கை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புதுவாழ்வு திட்ட மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும். தேர்வு செய்யப்படும் மகளிருக்கு தலா 25 வீதம், ஒரு மாத வயதுடைய அசல் இன கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.பயன்பெற விருப்பம் உள்ள பெண்கள் தங்கள் கிராமத்தின் அருகே உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி கால்நடை உதவி மருத்துவரிடம் வரும் 28 ம் தேதிக்குள் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X