பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவிலில் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர்.காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆயங்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், வட்டார மேற்பார்வையாளர் தம்பா தலைமையில் ஆய்வாளர்கள் கவியரசன், செந்தில், சவுந்தரராஜன், தமிழரசன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கச்சேரித் தெரு, பஸ் நிலையம் போன்ற இடங்களில் ஆய்வு செய்து, முகக் கவசம் அணியாமல் சென்றவர்களை மடக்கி ரூ.200 அபராதம் விதித்து முகக் கவசம் வழங்கினர். கடைகளில் முகக்கவசம் அணியாத கடைக்காரர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இதில் மூன்று கடைக்காரர்களிடம் தலா ரூ.500 வீதமும், பொதுமக்கள் 25 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.6500 அபராதமாக விதித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X