பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் வைக்க வேண்டும்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சிதம்பரம்; தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் இன்ஜினியர் ஜெயக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில் தற்போதைய முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர்களின் படங்கள் உள்ளன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்கவில்லை. தமிழக அரசின் பெரும்பாலான நிர்வாக செலவினங்களுக்கும், மக்கள் நலத்திட்ட பணிக்களுக்கான நிதியில் மத்திய அரசு வழங்கும் நிதியும், மானியமும் உள்ளடங்கியது தான்.அரசு அலுவலகங்களில் பிரதமரின் படங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. எனவே மோடியின் 70வது பிறந்த தினமான நாளைக்குள் (17 ம் தேதி) தமிழக அரசே வைக்க வேண்டும். இல்லையேல் பிரதமரின் படத்தை பா.ஜ.,வினர் வைக்க அனுமதிக்க வேண்டும்.இது குறித்து கடந்த 4 ம் தேதி தமிழக தலைமை செயலாளர் மற்றும் கடலுார் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளேன். இதன் நகல் கடிதம் பா.ஜ., மாநில தலைவர் முருகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அரசு தொடர் பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கடந்த10ம் தேதி நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் கடந்த 13 ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளேன். பின்னர், கடந்த 14ம் தேதி தலைமை செயலகத்தில், இது தொடர்பாக பொதுத்துறை அரசு துணை செயலாளர் ராகுல்நாத்தை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.இது குறித்து பா.ஜ., மாநில தலைவர் முருகன், தேர்தல் மண்டல பொறுப்பாளர் மற்றும் பா.ஜ., மாநில செயலாளர் ராகவன் ஆகியோரின் ஆலோசனையில், தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில் மோடியின் படங்களை வைக்க அரசாணை உள்ளது. எனவே பிரதமர் மோடியின் 70 வது பிறந்த நாளான 17 ம் தேதி அரசு அலுவலகங்களில் படங்களை வையுங்கள் என தெரிவித்தனர்.அதனை அனுமதிக்காத இடங்களில், அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் மிகப்பெரிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும் என மாநில தலைவர் முருகன் கூறியுள்ளார். எனவே மோடியின் 70 வது பிறந்தநாளில் கட்சியினர் செய்யும் மக்கள் சேவை பணிகளுடன், அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில் பிரதமர் மோடியின் படங்களை நிரந்தரமாக வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X