பொது செய்தி

தமிழ்நாடு

நந்திபகவானை அருகில் வழிபட்ட பக்தர்கள்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கடலுார்:கோவில்கள் ஐந்து மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள நிலையில், பிரதோஷ தினமான நேற்று நந்திபகவான் அருகில் இருந்து பக்தர்கள் வழிபட்டனர். கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பாடலீஸ்வரர், பெரியநாயகி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. மாலை 4:30 மணிக்கு பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அருகம்புல் மாலை சாற்றியும் அலங்காரம் செய்தும் தீபாராதனை நடந்தது. சிறிய நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு, ஐந்து மாதங்களுக்கு பிறகு 1ம் தேதி திறக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு பிறகு நந்தி பகவான் அருகில் இருந்து பக்தர்கள் வழிபட்டனர்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு மேல், நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X