பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது

Added : செப் 16, 2020
Share
Advertisement

காட்டுமன்னார்கோவில்: கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது என கலெக்டர் கூறினார்.காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழை காலத்திற்கான முன்னெச்சரிக்கை ஆய்வு, போஷான் அபியான் ஊட்டச்சத்து மாத விழாவில் பங்கேற்ற கலெக்டர் சந்திரசேகர சகாமுரி அளித்த பேட்டி: கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் தான் உள்ளது. பீதியால் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம். அதிக காய்ச்சல், சளி இருமல் அறிகுறிகள் இருந்தால் உடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதன் விபரம் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும். கடலுார் மாவட்டத்தில் இது வரை 1.5 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 17 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டத்தில் 13 ஆயிரத்து 500 பேர் அளவிற்கு குணமடைந்துள்ளனர். தற்போது 4,000 பேர் தான் சிகிச்சையில் உள்ளனர்.மாவட்டத்தில் கடலுார் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நோயாளிகளுக்கு தரமான உணவு மற்றும் மருந்துகள் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் 71 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் 11 அரசு மருத்துவமனைகள் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம். வீட்டில் இருக்க வேண்டும். வெளியில் வரும் போது முகக்கசவம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். அடிக்கடி கையை கழுவ வேண்டும்.இதன் மூலம் தொற்று பரவுவதை தடுக்க முடியும். மாவட்டத்தில் சற்று கூடுதலாக தொற்று இருந்தது. தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர சகாமுரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X