பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா விளையாட்டரங்கம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கடலுார்:கடலுார் அண்ணா விளையாட்டரங்கம் இன்று முதல் செயல்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அவரது அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று 16ம் தேதி முதல் காலை 6 முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. விளையாட்டு அரங்கிற்கு மேற்குபுரம் உள்ள சிறிய நுழைவு வாயிலை மட்டும் பயிற்சிக்கு வருவோர் பயன்படுத்த வேண்டும்.மேலும் 10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 65 வயதிற்குட்பட்டவர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். பயிற்சிக்கு வருவோர் தனி விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். பயிற்சி மேற்கொள்ள வருபவர்களுக்கு வெப்பமானி பரிசோதனை செய்யப்படும். அரங்க வளாகத்திற்குள் எச்சில் துப்பக் கூடாது. பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். நீச்சல் குளம் செயல்படவும், பார்வையாளர்கள் அனுமதிக்கவும் தடை தொடர்கிறது.மேலும் விவரங்களுக்கு மாவட்ட அலுவலக தொலைபேசி எண் 04142-220590 அல்லது 7401703495 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X