பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 268 பேருக்கு தொற்று

Added : செப் 16, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், மேலும் 268 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் வரை, 16 ஆயிரத்து 558 ஆகும். கர்நாடகா, நாகப்பட்டிணத்தில் இருந்து திரும்பிய 2 பேர், கர்ப்பிணி பெண்கள் 2, நோய் அறிகுறியுடன் 129, தனிமைப்படுத்தப்பட்டோர் 3, பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 132 பேர் உட்பட 268 பேருக்கு நேற்று, தொற்று உறுதியானதால் பாதிப்பு 16 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது.நேற்று, 523 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 487 பேருக்கு பரிசோதனை செய்ததில், 16 ஆயிரத்து 826 பேருக்கு தொற்று உறுதியானது.

ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 601 பேருக்கு தொற்று இல்லை. 3,060 பேருக்கு முடிவுகள் வர வேண்டியுள்ளது.நால்வர் பலிமாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை, 170 பேர் இறந்தனர். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விருத்தாசலத்தில் 46 வயது நபர் மற்றும் 42 வயது நபரும், புவனகிரி 55 வயது நபர் மேல் மருவத்துார் தனியார் மருத்துவமனையிலும், நெல்லிக்குப்பம் 73 வயது முதியவர் கடலுார் அரசு மருத்துவமனையிலும் நேற்று இறந்தனர். இதனால், இறந்தவர்கள் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X