பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பரவல் எதிரொலி

Added : செப் 16, 2020
Share
Advertisement

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் நாளை மகாளய அமாவாசை முன்னிட்டு நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், நாளை (17ம் தேதி) மகாளய அமாவாசையை முன்னிட்டு கடலுார் தேவனாம் பட்டிணம் கடற்கரை, கிள்ளை கடற்கரை, மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றங்கரை, வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றங்கரை, விருத்தாசலம் மணிமுக்தாறு ஆற்றங்கரை மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வுகள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அவரவர் வீடுகளில் தர்ப்பண நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X