பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறைகளை மீறினால் அபராதம் பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

Added : செப் 16, 2020
Share
Advertisement

சங்கராபுரம்: அரசு விதிமுறைகளை பின்பற்றாத கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் எச்சரித்தார்.சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது.கூட்டத்தில் சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் பேசியதாவது:சங்கராபுரம் நகரில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சங்கராபுரம் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்தால் ரு.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரு.500 அபராதம் விதிக்கப்படும். வணிக நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், சலுான் கடைகளில் அரசின் விதிமுறைகளை மீறுபவர்களிடம் ரு.5000 அபராதம், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அரசின் விதி முறைகளை பின்பற்றாவிடில் ரு.5000 அபராதம் வசூலிக்கப்படும்.எனவே அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.அதிகாரிகள் சோதனையில் குறைபாடு கண்டறியப்பட்டால் கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும்.இவ்வாறு செயல் அலுவலர் சம்பத்குமார் பேசினார். இளநிலை உதவியாளர் வைத்திலிங்கம் நன்றி கூறினார். கூட்டத்தில் வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ரவி உள்ளிட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X