பொது செய்தி

தமிழ்நாடு

மண்பாதை அமைத்து தரக்கோரிவிவசாயிகள் கலெக்டரிடம் மனு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: மேலப்பழங்கூர் பெரிய ஏரியை சுற்றி மண்சாலை அமைத்து தரக் கோரி மனு அளிப்பதற்காக விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: மேலப்பழங்கூர் மேற்கு திசையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியினையொட்டி 50க்கும் மேற்பட்ட விளைநிலம் உள்ளது. பலர் கால்நடைகள் வைத்துள்ளனர். கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் அறுவடை செய்து கனரக வாகனங்களில் ஏற்றி, இந்த ஏரி வழியாகத்தான் வெளிப்பகுதிக்கு கொண்டு வருகிறோம். ஆனால், மழைக்காலங்களில் ஏரி நிரம்பினால் விளைபொருட்களை வெளியே கொண்டு வரமுடியவில்லை. மேலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகிறோம். எனவே, ஏரியைசுற்றி மண்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X