பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தின கொண்டாட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க 34வது ஆண்டு அமைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வபோதகர், தணிக்கையாளர்கள் குமார், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார பொருளாளர் அண்ணாதுரை வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 34வது ஆண்டு துவக்கத்தையொட்டி, அலுவலக வளாகத்தில் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது.பி.டி.ஓ.,க்கள் நடராஜன், ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரைவழங்கினர்.நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பார்வதி, முன்னாள் பொருளாளர் கணேசன், முன்னாள் துணைத்தலைவர் அண்ணாமலை, வட்டார தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணை செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X