பொது செய்தி

தமிழ்நாடு

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடவடிக்கை கோரி மாற்றுத்திறனாளி மனு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளி போல போலி கையெழுத்து போட்டு சிமென்ட் மூட்டைகள், கம்பி, ஜன்னல் உள்ளிட்டவைகளை பெற்று ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி மனு அளித்துள்ளார்.இதுகுறித்து கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் ஆரோக்கியசாமி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத் துள்ள மனு :எனக்கு கடந்த 2017-18-ம் ஆண்டு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பணி ஆணை வழங்கப்பட்டது. முதல் தவணையாக எனது வங்கி கணக்கில் ரூ.26 ஆயிரம் செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளியான நான், வீடு கட்டுவதற்கு முடியாததால் பணி ஆணையை எனது மனைவியிடம் கொடுத்துவிட்டு வெளியூருக்கு பிழைப்பு தேடி சென்றுவிட்டேன்.எனது ஊரை சேர்ந்த தணிகாசலம் மகன் குள்ளன் என்பவர். என் மனைவியிடம் உங்களுடைய ஒர்க் ஆர்டரை என்னிடம் கொடு, நான் உதவி செய்கிறேன் எனக்கூறி வாங்கி சென்று எனது வீட்டு வேலைக்கான 84 மூட்டை சிமென்ட், 320 கிலோ கம்பி, இரும்பு கதவு, ஜன்னல் அனைத்தையும் எடுத்து வேறு நபரிடம் விற்றுவிட்டார். இதற்கு பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.எனவே இதுகுறித்து கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து எனது வீட்டு வேலைக்கான பொருட்களை உடனடியாக வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X