பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டை அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணி துவக்கம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணி தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மீண்டும் துவங்கியது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எம்.எஸ். தக்கா பகுதியிலிருந்து பு.கொணலவாடி வரையிலான சாலை பராமரிப்பு இல்லாததால் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக இருந்து வந்தது. இந்த மோசமான சாலையால் அவ்வப்போது வாகனங்கள் பஞ்சர் ஆவதும், பழுது ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.இதனால் சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும், சிமெண்ட் சாலைகள் பொது நிதி திட்டத்தின் கீழ் 4.50 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்க ரூ. ஒரு கோடியே 57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 6ம் தேதி உளுந்தூர்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் கிராமத்தில் தொகுதி எம்எல்ஏ குமரகுரு தார்சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். இருந்தும் பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து நின்று போன தார்சாலை பணி தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X