பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரத் துறை அபராதம் விதிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களிடம் சுகாதாரத் துறை அலுவலர்கள் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், திருக்கோவிலூர் நகர்புற சுகாதார நிலையம் சார்பில், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், சங்கரன், வெங்கடேசன், பூபதி ஆகியோர் ஐந்துமுனை சந்திப்பில் போலீஸ் பாதுகாப்புடன் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.முகக் கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அதன் அவசியம் குறித்து விளக்கியதுடன், ஒவ்வொருவருக்கும் ரூ. 200 வீதம், நேற்று ஒரே நாளில் ரூ.6,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X