தமிழ்நாடு

ரூ.1 கோடி: பழைய பஸ் நிலைய கடைகளுக்கு டெபாசிட்...விழுப்புரம் நகராட்சியில் நாளை பொது ஏலம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், புதிதாக 78 கடைகள் கட்டி, குத்தகைக்கு விடுவதற்கு நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் பெற திட்டமிடப்பட்டுள்ளது.விழுப்புரம் பழைய பஸ் நிலையத்திற்கு மேற்கு பகுதியில், மெயின்ரோட்டினை ஒட்டி, நகராட்சி சார்பில் 20 கடைகள் கட்டி, குத்தகை அடிப்படையில் வாடகை விடப்பட்டிருந்தது.

தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அந்த கடைகளின் கட்டடம், நாளடைவில் சேதமடைந்தது.இதனையடுத்து கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம், அந்த கடைகள் இருந்த கட்டடம் நகராட்சி மூலம் இடித்து, அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது, அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டி, பழைய வாடகைதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், மீண்டும் கடை அளிப்பதாக நகராட்சி நிர்வாகம் உறுதியளித்திருந்தது.இந்நிலையில் கட்டடம் அகற்றப்பட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு பின், அந்த இடத்தில் புதிதாக கடைகள் கட்டப்பட்டு, முடிவடையும் தருவாயில் உள்ளது.பொது ஏலம்விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், புதியதாக தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கட்டப்பட்டு வரும் மற்றும் கட்டப்படவுள்ள கடைகளுக்கு முன் ஏலம் (பிரீ ஆக்ஷன்) மற்றும் முன் ஒப்பந்த அறிவிப்பு, நகராட்சி நிர்வாகம் சார்பில், வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, விழுப்புரம் பழைய பஸ் நிலைய மேற்கு பகுதியில் வடக்குமுகம் பார்த்தவாறு 11 கடைகளும், தெற்கு முகம் பார்த்தவாறு 11 கடைகளும் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுப்பதற்கு, ஒரு கடைக்கு தலா ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் வைப்புத்தொகை (டெபாசிட்) தொகை செலுத்த வேண்டும்.இதேபோல், முதல் தளத்தில் உள்ள ஒரு கடைக்கு ரூ.5 லட்சமும், மற்றொரு கடைக்கு ரூ. 6 லட்சமும் டெபாசிட் செலுத்த வேண்டும். மேலும், பழைய பஸ்நிலைய பெட்ரோல் பங்க் பின்புறத்தில்முதல் தள கடைகள், பழைய பஸ் நிலையத்தில் கிழக்கு பகுதி வடக்குமுகம் பார்த்த தரை தள கடைகளுக்கு தலா ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும்.பழைய பஸ் நிலையத்தின் உட்புறம் தெற்குமுகம் பார்த்த தரை தள கடைகளுக்கு தலா ரூ.ஒரு லட்சம் (டெபாசிட்) செலுத்த வேண்டும்.நாளை ஏலம்பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கடைகள் மற்றும் கட்டப்படவுள்ள கடைகள் என 78 கடைகளுக்கு, நாளை ( (17 ம் தேதி ) காலை 11:00 மணிக்கு, பொது ஏலம் நடைபெற உள்ளது.இதற்கான ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், ஒவ்வொரு கடைக்கும் டெபாசிட் தொகையை தனித்தனியாக வங்கி வரைவோலை (டி.டி) எடுத்து, இன்று (16ம் தேதி) மாலை 4:00 மணிக்குள், விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

புதியதாக ஏலம் விடப்படுகின்ற கடைகளுக்கு டெபாசிட் தொகையாக, ஒரு கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏலம் எடுத்த கடைகளுக்கான ஒரு ஆண்டு வாடகை தொகையை முன்கூட்டியே செலுத்திடவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X